இன்று (செப்.,9) நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர்.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்தது.இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்த இன்று நடந்த கூட்டத்தில், தற்போது வழங்கப்பட்டு வரும் 113 சதவீதம் அகவிலைப்படியை 119 சதவீதமாக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக ஏப்ரல் மாதம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 6 சதவீதம் உயர்த்தப்பட்டு ஜனவரி மாத முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 7வது சம்பள கமிஷனை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனால் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, தற்போது 6 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
அப்படி வழங்கினால் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இன்று வெளியிட்ட 6 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : Dinamalar